இந்தியா

பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்களை அச்சுறுத்தும் பாதுகாப்பு படைகள்: தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகார்  

பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்களை பாதுகாப்பு படைகள் அச்சுறுத்துகின்றன என்று தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது

IANS


புது தில்லி: பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்களை பாதுகாப்பு படைகள் அச்சுறுத்துகின்றன என்று தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் தொகுதிக்கு உட்பட்ட துப்ராஜ்பூரின் போடுமா பகுதியில் திங்களன்று நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அப்போது சில வாக்குச் சாவடிகளில் உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட தகராறில் கிராம மக்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கற்களைக் கொண்டு தாக்கினர்.

அப்போது அவர்களை விரட்ட மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதாகத் தெரிகிறது. அதேசமயம் குண்டுகள் ருகிலுள்ள சுவற்றில் பாய்ந்தது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, 'துப்ராஜ்பூரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலம் சம்பந்தப்பட்டது. மத்திய பாதுகாப்புப் படையினர் இதனைச் செய்ய முடியாது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்' என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்களை பாதுகாப்பு படைகள் அச்சுறுத்துகின்றன என்று தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தில்லியில் திங்களன்று தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒரு குழுவாகச் சென்று எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளது.

அவர்கள் தங்கள் புகார் மனுவில்  வாக்குச் சாவடிகளில் பணியில் இருக்கும் மத்திய பாதுகாப்பு படையினர் முன்கூட்டியே முடிவுசெய்து ஒரு திட்டத்துடன் செயலாற்றுகின்றனர். அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமாக மக்கள் மனதிலொரு அச்சத்தை உருவாக்குகின்றனர்     

அவர்கள் வாக்குச் சாவடிகளின் உள்ளே சென்று வாக்களிப்பவர்களைத் தடுக்கும் வேளையிலும் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT