இந்தியா

பாஜகவுக்கு வாக்களிக்காதோருக்கும் பணியாற்ற வேண்டும்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

DIN

பாஜக எம்.பி.க்கள் நமது கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பணியாற்ற வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும், அவற்றின் பயன்களையும் மக்களிடம் உரிய முறையில் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
 பாஜகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 380 பேருக்கான இரு நாள் பயற்சி முகாம், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் நிறைவுரையாற்றி மோடி பேசியதாவது: நமது கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தொகுதி மேம்பாட்டுக்காக முழுமூச்சுடன் பணியாற்ற வேண்டும். தொகுதி மக்களிடம் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும்.
 மக்களிடம் நீங்கள் பேசுவதைவிட, நீங்கள் தொகுதிக்கு ஆற்றிய பணிகள் அதிகம் பேசப்பட வேண்டும். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலின்போது இப்போது பெற்றதைவிட கூடுதல் வாக்குகளை பெறும் அளவுக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும்.
 மக்களின் பணியில் மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட வேண்டும். வெற்றி பெற்ற பிறகு, நமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து மக்களின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இதன் மூலம் நமது கட்சிக்கு வாக்களிக்காதவர்களின் மனதையும் நாம் வெல்ல முடியும். உங்கள் பணிகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT