இந்தியா

ஸ்ரீநகர்-தில்லி விமானக் கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா

DIN

மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வேகமாக வெளியேறிவரும் நிலையில், ஸ்ரீநகர்-தில்லி இடையேயான விமானக் கட்டணத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் குறைத்துள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: ஏர் இந்தியா விமானத்தில் ஸ்ரீநகரிலிருந்து தில்லிக்கு செல்வதற்கான கட்டணம் ரூ.9,500 இல் இருந்து மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.6,715 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு செல்வதற்கு வரும் 15ஆம் தேதி வரை பயணக் கட்டணம் ரூ.6,899-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முன்னதாக, காஷ்மீரிலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்களை இந்தச் சூழ்நிலையில் அதிகரிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT