இந்தியா

காஷ்மீர் விவகாரம்: முன்னாள் முதல்வர்கள் இருவர் கைது 

DIN

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவையில் செவ்வாயயன்று மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

மத்திய அரசின்  நடவடிக்கைக்கு  காஷ்மீர் அரசியல் கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

இந்நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வர்கள்  மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.       

தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இருவரும் ஞாயிறு இரவில் இருந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT