முகப்பு
இந்தியா

ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை மாறாக..: மக்களவையில் அமித் ஷா பதில்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட]அவரது சுய விருப்பத்தின்பேரில் என்று மக்களவையில் இன்று அமித் ஷா விளக்

Updated On : 6 ஆகஸ்ட், 2019 at 4:29 PM
பகிர்:


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுக் காவலில் வைக்கப்படவும் இல்லை, அவரது சுய விருப்பத்தின்பேரில் வீட்டில் இருக்கிறார் என்று மக்களவையில் இன்று அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, எனக்கு அடுத்த இருக்கையில்தான் ஃபரூக் அப்துல்லா அமர்ந்திருப்பார். ஆனால், அவர் தற்போது அவையிலும் இல்லை, அவரது குரலும் ஒலிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படவில்லை, அவர் தனது சுய விருப்பத்தின் பேரில் வீட்டிலேயே இருக்கிறார் என்று விளக்கம் அளித்தார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.