இந்தியா

'காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற விரும்புகிறது இந்தியா': பாகிஸ்தான் அமைச்சர் ஆவேச பேட்டி 

'காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற இந்தியா விரும்புகிறது' என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

DIN

இஸ்லாமாபாத்: 'காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற இந்தியா விரும்புகிறது' என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 'காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற இந்தியா விரும்புகிறது' என்று பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்றுஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

காஷ்மீரை மக்கள் தொகை மற்றும் பரவல் அடிப்படையில் பிரித்து, அன்னியர்களை அங்கு  குடியேற அனுமதிப்பதன் மூலம், காஷ்மீரை இன்னொரு பாலஸ்தீனமாக மாற்ற இந்தியா விரும்புகிறது. அவ்வாறு நடந்து போர் ஏற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு இடையேயான சிறு சிறு பிரச்னைகளில் சண்டையிடுவதைக் கைவிட்டுவிட்டு, இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் தக்க பதிலடி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜனவரி மாத ஒதுக்கீடு வெளியீடு

தீபாவளி: ரயில்வே முன்பதிவு மையம் செயல்படும் நேரம் அறிவிப்பு

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: டிரம்ப் நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT