இந்தியா

சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் தரிசனம்: அத்திவரதரை திங்கள்கிழமை முற்றுகையிட்ட வி.வி.ஐ.பி.க்கள்! 

DIN

அத்திவரதர் பெருவிழாவின் 43-ஆவது நாளான திங்கள்கிழமை பெருமாள் மஞ்சள் நிறப் பட்டாடையும், பச்சை நிற அங்கவஸ்திரமும் அணிந்து, பழங்களால் செய்யப்பட்ட ராஜ கிரீடமும், சிவப்பு, வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட வரிமாலை, மகிழம்பூ மாலைகள் சூடி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திங்கள்கிழமை ஒரே நாளில் 5 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 

இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அத்திப்பழ மாலையும், சால்வையும் அணிவித்து, அத்திவரதரின் திருவுருவப்படமும், கோயில் பிரசாதமும் பட்டாச்சாரியர்கள் வழங்கினர். 
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன், ஆந்திர மாநில நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவும் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தனது குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் அத்திவரதரை திங்கள்கிழமை தரிசனம் செய்தனர்

அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆக.16-ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

SCROLL FOR NEXT