இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு மம்தாவே பொறுப்பு: காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி

DIN


மம்தா பானர்ஜியின் கொள்கை மற்றும் அரசியல்தான் மேற்கு வங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார். 

17-வது மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இடதுசாரி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதுவே, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றிருந்த இடம் வெறும் 2, திரிணமூல் காங்கிரஸ் வென்றிருந்த இடம் 34 என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மக்களவைத் தேர்தலில் 16 இடங்களைக் கூடுதலாக வென்றதன் மூலம் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் தனக்கான அரசியல் இடத்தை உறுதிசெய்துள்ளது. 

இந்த நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு மம்தாவே பொறுப்பு என்று விமரிசித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 

"மேற்கு வங்கத்தில் பாஜக கால் ஊன்றியதற்கு மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல்தான் காரணம். பாஜகவுக்கு இடமளிக்கும் வகையில் மம்தா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்தது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT