இந்தியா

10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

DIN


மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து  மாநில அரசுப் பல்கலைக் கழகங்களை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) கேட்டுக்கொண்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து, அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தப் புதிய இடஒதுக்கீட்டு நடைமுறையை உடனடியாக நிகழ் கல்வியாண்டிலேயே (2019-20) அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், மாநில அரசு செயலர்களுக்கு சுற்றறிக்கையையும் யுஜிசி திங்கள்கிழமை அனுப்பியுள்ளது.
அதில், இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் யுஜிசி வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT