இந்தியா

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு: பாக்., பிரதமர் குறித்து மறைமுக சாடல்

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்புடன் இன்று (திங்கள்கிழமை) தொலைபேசியில் பேசினார்.

DIN


பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்புடன் இன்று (திங்கள்கிழமை) தொலைபேசியில் பேசினார். 

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். 30 நிமிடம் நடைபெற்ற இந்த உரையாடலில் இருவரும், இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினர். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மறைமுகமாக தாக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, 

"பிராந்தியச் சூழ்நிலையைப் பொருத்தவரை, ஒரு சில தலைவர்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்" என்றார். மேலும், பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த உரையாடலில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT