இந்தியா

இடுப்பு மூட்டு பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜான்சன் & ஜான்சன் இழப்பீடு

DIN


உத்தரபிரதேசத்தில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் செயற்கை மூட்டுகளால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு தலா ரூ.25 லட்சத்தை அந்நிறுவனம் இழப்பீடாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து அம்மாநிலத்தின் மருந்து உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியான ஏ.கே.ஜெயின் கூறியுள்ளதாவது:
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் வகை செயற்கை மூட்டுகளை பயன்படுத்தி இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூன்று பேருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த நிறுவனம் தயாரித்து அளித்த செயற்கை மூட்டுகளில் பிரச்னை இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் மீண்டும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ.25 லட்சத்தை அந்த நிறுவனம் இழப்பீடாக வழங்கியுள்ளது. மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையை பொருத்தமட்டில் இதுவரையில் இதுபோன்ற புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் வகை செயற்கை மூட்டுகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து கொண்ட 67 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது, தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றம் கடந்த மே மாதத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT