இந்தியா

பொருளாதார மந்த நிலையை அரசு ஆலோசகர்களே ஒப்புக் கொண்டனர்: ராகுல் காந்தி

DIN


நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என்பதை மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்களே ஒப்புக் கொண்டு விட்டனர்; கஷ்டப்படும் மக்களுக்கு நிதியுதவி அளித்து பொருளாதாரத்தின் நிலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சரிவில் உள்ளது என்று காங்கிரஸ் நீண்ட காலமாக கூறி வந்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. 
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதை மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்களே இறுதியாக ஒப்புக் கொண்டுவிட்டனர். அதனால், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாங்கள் கூறும் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். பேராசையோடு இல்லாமல், ஏழை மக்களிடம் இருந்த பெற்ற பணத்தை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT