இந்தியா

ரூ.5,000 கோடிக்கு எரிபொருள் கட்டண பாக்கி வைத்திருக்கும் ஏர் இந்தியா!

PTI


புது தில்லி: கடந்த எட்டு மாதங்களாக எரிபொருள் கட்டண பாக்கியை செலுத்தாமல், ஏர் இந்தியா நிறுவனம் ரூ.5,000 கோடியை நிலுவை வைத்திருப்பதாக இந்தியன் ஆயிர் கார்ப்பரேஷன் குற்றம்சாட்டியுள்ளது.

நிலுவைத் தொகையை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, கடந்த வியாழக்கிழமை முதல் இந்தியாவில் உள்ள 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தியுள்ளன.

அதாவது கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம், மொஹாலி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் சேவையை பெட்ரோலியம் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

பெட்ரோலியம் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன. சுமார் 8 மாதங்களாக எரிபொருள் கட்டணத்தை செலுத்தாததால், இன்னும் 3 மாதங்களுக்குள் ரூ.5000 கோடியை செலுத்த வேண்டும் என்று பெட்ரோலியம் நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளன.

இது குறித்து ஏர் இந்தியாவுக்கு கடிதம் வாயிலாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT