இந்தியா

இறுதிச் சடங்குகள்: நிகம்போத் காட் கொண்டு செல்லப்பட்ட அருண் ஜேட்லி உடல்

DIN

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

பண்பட்ட, நாகரிகமிக்க அரசியல் தலைவராக விளங்கிய ஜேட்லியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை காலை வைக்கப்பட்டது.

மறைந்த அருண் ஜேட்லியின் இறுதிச் சடங்குகள், தில்லியிலுள்ள நிகம்போத் காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT