இந்தியா

ஒடிசாவில் ஓர் அதிர்ச்சி சம்பவம்: கூரியர் பார்சலில் பாம்பு!

DIN

ஒடிசா மாநிலத்தில் வசித்து வரும் நபர், தனக்கு வந்திருந்த கூரியர் பார்சலை திறந்தபோது, அதில் இருந்து பாம்பு வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் வேலை காரணமாக ஒடிசாவில் மயூர்பன்ச் மாவட்டத்தில் ராஜரங்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கூரியர் மூலமாக ஒரு பார்சல் வந்துள்ளது.

அதைத் திறந்த முத்துக்குமரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது பார்சலில் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்ததைப் பார்த்து முத்துக்குமரன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, வனத்துறையினர் வந்து பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுவிட்டனர். 

முத்துக்குமரன் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை டெலிவரி செய்ய, குண்டூரில் கடந்த 9ம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி, கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்க்கும் போது அதில் பொருட்களுடன் இருந்த பாம்பை கண்டதும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கூரியர் நிறுவனத்திடம் தான் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT