இந்தியா

ஃபிட் இந்தியா விழிப்புணர்வு திட்டம்: கோலாகல விழாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

DIN


புது தில்லி: நாட்டு மக்களுக்கு உடல் நலன் குறித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஃபிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வுக்கு உதாரணமாக வாழும் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தகுதியான இந்தியா என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளார்.

புது தில்லியில் இன்று நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் ஃபிட் இந்தியா இயக்கத்தைத் தொடங்கி வைத்து மோடி உரையாற்றினார். உடற்பயிற்சியை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இவ்விழா களைகட்டியது.

இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய மோடி, உடல் ஆரோக்கியம் என்பது நமது கலாசாரத்தின் ஒரு அங்கம். ஆனால் தற்போது உடல் ஆரோக்கியம் குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. சில ஆண்டு காலத்துக்கு முன்பு வரை ஒரு மனிதன் தினமும் சராசரியாக 8 - 10 கி.மீ. அளவுக்கு நடந்தான். அல்லது சைக்கிள் ஓட்டினான் அல்லது ஓடினான்.

ஆனால் தற்போதைய தகவல் தொழில்நுட்பம் காரணமாக மனிதனின் உடற்செயல்பாடுகள் பெருமளவுக்குக் குறைந்துவிட்டது. அதனாலேயே நாம் நடப்பதும் குறைந்துவிட்டது. ஆனால் அதே தொழில்நுட்பம்தான், தற்போதெல்லாம் மனிதன் அதிகமாக நடப்பதே இல்லை என்றும் கூறுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பேசிய மோடி, நமது வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஆரோக்கியத்தை முன் வைப்போம் என்று உரக்கச் சொன்னார்.

நிகழ்ச்சியில் விளையாட்டு வீராங்கனைகள் பி.வி. சிந்து, ஹிமா தாஸ், சாக்ஷி மாலிக், விளையாட்டு வீரர் பஜ்ரங் புனியா  மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT