இந்தியா

பேரவையில் ஆபாச விடியோ பார்த்தவர் துணை முதல்வரா? கர்நாடக மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கர்நாடக சட்டப்பேரவையிலேயே ஆபாச விடியோ பார்த்தவர் துணை முதல்வராக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் காங்கிரஸார் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

கர்நாடக சட்டப்பேரவையிலேயே ஆபாச விடியோ பார்த்தவர் துணை முதல்வராக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் காங்கிரஸார் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்மா அமர்நாத், ஆர்ப்பாட்டத்தின்போது பேசியதாவது:

கடந்த 2012-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் ஜெ.கிருஷ்ண பலேமார், பாட்டீல் மற்றும் லஷ்மண் சாவாடி ஆகியோர் ஆதாரத்துடன் பிடிபட்டனர்.

எனவே லஷ்மண் சாவாடி, கர்நாடக மாநில துணை முதல்வராக செயல்பட தகுதியற்றவர். எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, பேரவையில் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக, ரேவ் பார்ட்டி தொடர்பான ஆபத்துகளை அறிந்துகொள்ளவே அதுதொடர்பான விடியோ பதிவுகளை பார்த்ததாக லஷ்மண் சாவாடி விளக்கமளித்திருந்தது நினைவுகூரத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT