இந்தியா

துருக்கி, எகிப்தில் இருந்து 17 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி: பொது விநியோகத் துறை அமைச்சகம் தகவல்

DIN

தமிழகம், தில்லி, மும்பை உட்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக வெங்காயம் பதுக்கலுக்கு வித்திட்டுள்ளதாக வா்த்தக பகுப்பாய்வாளா்கள் கூறுகின்றனா். 

மேலும், அதிக மழை, பாரம்பரிய முறை காரணமாக சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அழிந்துவிட்டது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், விலை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், சந்தையில் வெங்காயத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் மேற்கொண்ட முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, துருக்கியில் இருந்து 11,000 மெட்ரிக் டன் வெங்காயம் மற்றும் எகிப்தில் இருந்து 6,090 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை டிசம்பர் முதல் ஜனவரி மாதத்துக்குள்ளாக இந்தியா வந்தடையும் என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT