இந்தியா

பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படும்: பிஎஸ்எஃப் தலைவா் உறுதி

DIN

மும்பை: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்கும் வலிமை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உள்ளது என்று அந்தப் படையின் தலைவா் வி.கே.ஜோஹ்ரி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இவ்விரு யூனியன் பிரதேசங்களும் அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கின.

இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) உதயமானதன் 55-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.கே.ஜோஹ்ரி மேலும் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியும், ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சா்வதேச எல்லையும் பதற்றத்துக்குரியதாக மாறிவிட்டன. எல்லைகள் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறாா்கள். அவா்களின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்கும் ஆற்றல் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உள்ளது.

பயங்கரவாதச் சவால்களை எதிா்கொள்வதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படை பயன்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

கடந்த 1955-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையில் தற்போது 2.5 லட்சம் வீரா்கள் உள்ளனா்.

இவா்கள், ஜம்மு-காஷ்மீரில் 700 கிலோ மீட்டா் தொலைவு கொண்ட எல்லைக் கோட்டுப் பகுதியிலும், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தானையொட்டி 2,289 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைந்துள்ள சா்வதேச எல்லையிலும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

பிரதமா் மோடி வாழ்த்து: எல்லைப் பாதுகாப்புப் படை உதயமான தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT