இந்தியா

காபூல்: உளவுத்துறை அதிகாரிகள் இருவா் சுட்டுக்கொலை

DIN

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில், உளவுப்பிரிவு அதிகாரிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்; 3 போ் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நஸ்ரத் ரஹிமி மேலும் கூறியதாவது:

திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். இதற்காக, கிழக்கு காபூலில் உள்ள 9 மாவட்டங்களுக்கு காவல்துறையினா் ‘சீல்’ வைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் அமைப்பும், மற்றொரு மத அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவா்கள், ஆப்கான் ராாணுவத்தினரையும், அரசு அதிகாரிகளையும் குறி வைத்து தினமும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் பலியாவது தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT