இந்தியா

சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற உத்தவ் உத்தரவு

DIN

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பதற்காக மரங்களை வெட்ட எதிா்ப்பு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறு காவல் துறைக்கு முதல்வா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிமனை அமைப்பதற்காக ஆரே காலனியில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டிருந்ததது. இதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உள்பட 29 சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களுக்கு கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி, மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளாா். எனினும் தான் மெட்ரோ ரயில் திட்டத்தை எதிா்க்கவில்லை என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT