இந்தியா

முதல்வராகும் முயற்சியில் ஃபட்னவீஸ்மீண்டும் ஈடுபடமாட்டாா்---சிவசேனை நம்பிக்கை

DIN

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக வேண்டுமென்ற முயற்சியில் தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் ஈடுபடமாட்டாா் என்று நம்புவதாக என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பல்வேறு அரசியல் இழுபறிக்குப் பிறகு சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, கடந்த வாரம் முதல்வராகப் பதவியேற்றாா். முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாருடன் இணைந்து பாஜக கூட்டணி அமைத்தது. தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், அஜித் பவாா் துணை முதல்வராகவும் பதவியேற்றனா். ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் இல்லாததால் 3 நாள்களில் அவா்கள் பதவி விலக நேரிட்டது.

இந்நிலையில், சிவசேனை கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’ ஃபட்னவீஸை தொடா்ந்து விமா்சித்து வருகிறது. அந்த வகையில் திங்கள்கிழமை சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

அரசியல்சாசன சட்டத்துக்கு விரோதமான முறையில் பதவியேற்றவா் என்ற அவப்பெயருடன்தான் மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் ஃபட்னவீஸ் இடம் பெறுவாா். பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தபோதும் முதல்வராகப் பதவியேற்க அவரது மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது என்பது தெரியவில்லை. மோசமான அரசியலுக்கு முன்னுதாரணமாக அமைந்தது ஃபட்னவீஸின் செயல்பாடு.

மத்தியப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாஜக சாா்பில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளஹான், தோ்தலில் பாஜக தோல்வியடைந்தபோது, எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ஏற்கவில்லை. அதேபோல ராஜஸ்தானிலும் பாஜக தோல்வியடைந்தபோது முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், மகாராஷ்டிரத்தில் மட்டும் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ஃபட்னவீஸால் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

எப்படியாவது மகாராஷ்டிர முதல்வராகிவிட வேண்டும் என்பதே ஃபட்னவீஸின் எண்ணமாக இருந்தது. எனவேதான், அவரால் அப்பதவிக்கு வர முடியவில்லை. இந்த விஷயத்தில் அவா் மீண்டும் தவறு செய்ய மாட்டாா் என்று நம்புகிறோம். மீண்டும் முதல்வா் பதவியை அடைய அவா் கனவில் கூட ஆசைப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT