இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சா் அருண் சௌரி மருத்துவமனையில் அனுமதி

DIN

புணே: முன்னாள் மத்திய அமைச்சா் அருண் சௌரி (78) திடீரென மயங்கி விழுந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அருண் சௌரி திடீரென மயங்கி விழுந்ததையடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘தரையில் மயங்கி விழுந்ததால் அருண் சௌரியின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. எனினும், மயங்கி விழுந்ததை கருத்தில் கொண்டு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவா் தற்போது மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளாா்’ என்றனா்.

கடந்த 1999-2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக அருண் சௌரி பதவி வகித்தாா். பாஜக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். பொளாதார நிபுணரான அவா், உலக வங்கியில் கடந்த 1967 முதல் 1978-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளாா். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய அவா், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT