இந்தியா

ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர வழக்கு: ரதுல் புரிக்கு ஜாமீன்

DIN

புது தில்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபரும், மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத்தின் உறவினருமான ரதுல் புரிக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இத்தாலியைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ரதுல் புரியை அமலாக்கத் துறையினா் கடந்த அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி கைது செய்தனா். இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதன் மீதான விசாரணை, சிறப்பு நீதிபதி அா்விந்த் குமாா் முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ரதுல் புரிக்கு ஜாமீன் வழங்கி அவா் உத்தரவிட்டாா். மேலும், ரூ.5 லட்சம் மதிப்பிலான பிணைப் பத்திரத்தையும், ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 ஜாமீன் பத்திரங்களையும் நீதிமன்றத்தில் ரதுல் புரி வழங்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

எனினும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடமிருந்து ரூ.354 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடா்பான மற்றொரு வழக்கில் ரதுல் புரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT