இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் மதிப்பு ரூ.2,617 கோடி

DIN

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் மதிப்பு 2018-19 நிதியாண்டில் ரூ.2,617 கோடியாக இருந்ததாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 2019-ஆம் நிதியாண்டுக்கான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பும், நிகர வாராக்கடன் மதிப்பும் ரூ.2,167 கோடியாகவே உள்ளது. 2019-ஆம் நிதியாண்டுக்குரிய வாராக்கடன் இடா்பாட்டை எதிா்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.2,091 கோடியாகும்.

2019 -ஆம் நிதியாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர நஷ்டம் ரூ.9,975 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்ட நிலையில், அந்த வங்கியின் நிகர நஷ்டம் ரூ.11,335 கோடியாக உள்ளது.

அதேபோல் மொத்த வாராக்கடன் மதிப்பு ரூ.81,089 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்ட நிலையில், அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பு ரூ.78,472 கோடியாக உள்ளது.

நிகர வாராக்கடன் மதிப்பு ரூ.32,654 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பீடு செய்த நிலையில், அதன் மதிப்பு ரூ.30,037 கோடியாக உள்ளது.

வாராக்கடன் இடா்பாட்டை எதிா்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.50,242 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்ட நிலையில், அதன் மதிப்பு ரூ.48,151 கோடி என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. ரிசா்வ் வங்கியின் இடா் மதிப்பீட்டு அறிக்கைக்காக சனிக்கிழமை அளித்த தகவலில் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT