முகப்பு
இந்தியா

தில்லியில் இந்தியா கேட் முன்பாக பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம்!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தில்லி இந்தியா கேட் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:33 PM
பகிர்:

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தில்லி இந்தியா கேட் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது, மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று லக்னோ, மும்பை, ஹைதராபாத், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திங்கட்கிழமை போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தில்லி இந்தியா கேட் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவருடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், தில்லி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்தும் பிரியங்கா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →