தலைநகர் தில்லியில் பனிமூட்டம்: 11 ரயில்கள் தாமதம்
கடும் பனிமூட்டம் காரணமாக தலைநகர் தில்லி வரும் 11 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக தலைநகர் தில்லி வரும் 11 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த மாதம் தொடக்கத்திலிருந்து கடும் குளிர் நிலவி வருகிறது. காலை நேரங்களில் நிலவும் மூடு பனியால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிலவிய பனி மூட்டம் காரணமாக 11 ரயில்களின் வருகை தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான பனி மூட்டம் காரணமாக தில்லி வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே வருகின்றனர். இதனால் பயணிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மோசமான காற்றின் தரம் மற்றும் கடும் குளிர் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
தில்லி மட்டுமன்றி, பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கடும் பனி நிலவி வருகிறது.