இந்தியா

"மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான் மம்தா": மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு 

"மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ள விவகாரம் சர்சையைக் கிளப்பியுள்ளது.

ANI

புது தில்லி: "மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ள விவகாரம் சர்சையைக் கிளப்பியுள்ளது.

சீட்டுக் கம்பெனி மோசடி விசாரணை தொடர்பாக, கொல்கதாக மாநகர் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்த  விவகாரம், சமீபத்தில் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடை யே கடும் மோதலை உருவாக்கியது.

தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.  வியாழனன்று அவையில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தினேஷ் திரிவேதி, மத்திய அரசை முந்தைய ஆங்கில அரசுக்கும், மம்தாவை ஜான்சி ராணிகும் ஒப்பிட்டு பேசி, அவரைப்  புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில் "மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ள விவகாரம் சர்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

மம்தாவை ஜான்சி ராணியுடன் ஒப்பிடுவது என்பது ஜான்சி ராணியை அவமதிக்கும் விதத்தில் அமைந்த கூற்றாகும்.மம்தா வேண்டுமானால்  மேற்கு வங்கத்தை அழித்த சாத்தானாக இருக்கலாம். தன்னை எதிர்த்து பேசுபவர்களையெல்லாம் அழித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம்.

அவரிடம் ஜான்சி ராணியாகவோ, பதமாவதியாகவோ மாறும் ஆற்றல் இல்லை. மம்தா ரோஹிங்க்யா ஊடுருவல்காரராகளை ஆதரித்துக் கொண்டு, இந்தியாவை பிரிப்பவராக இருக்கலாம். ஜான்சி ராணி நாட்டை காக்கப் போராடியவர். மம்தா நாட்டை த் துண்டாட போராடுகிறார்.

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT