இந்தியா

மும்பை விமான நிலையத்தில் ரூ.7 கோடி தங்கம் பறிமுதல்!

மும்பை விமானநிலையத்தில் பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள்

DIN


மும்பை: மும்பை விமானநிலையத்தில் பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து மும்பைக்கு நேற்று மாலை வந்த விமான பயணிகளில் ஒருவர், அனுமதியின்றி தங்கம் கடத்தி வருவதாக வந்தத் தகவலின் பேரில், விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அவரது டிராலி பேக்கின் பக்கவாட்டில் தங்க கட்டிகளை மறைத்து தைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து டிராலி பேக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்து 44 தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.6 கோடியே 74 லட்சம் என தெரியவந்தது.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள்தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT