இந்தியா

பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கிவிட்டதா இந்தியா?

DIN


புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைபடுத்தும் நடவடிக்கையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்சிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதனால், சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப் பெரிய கண்டனத்தை இந்தியா வெளிப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா தொடங்கிவிட்டதாக தெரிகிறது. 

புல்வாமா சம்பவம் நேற்று அரங்கேறியதை அடுத்து, இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே சுமார் 20 நாடுகளின் தூதர்களை அழைத்து பயங்கரவாத செயல் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த கூட்டத்தில் அனைத்து தெற்காசிய நாடுகள் மற்றும் பிரதான நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, கொரியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களை விஜய் கோகலே சந்தித்துள்ளார். அப்போது அவர் அரசு கொள்கை முடிவுக்காக பாகிஸ்தான் எப்படி பயங்கரவாதத்தை கடைபிடிக்கிறது என்பதை வெளிநாட்டு தூதர்களிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT