இந்தியா

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு காஷ்மீரில் இறுதி மரியாதை

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு காஷ்மீரில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.

காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினார்.
 

வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து, பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர். 

வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து, பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தான்.  இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.

இந்தக் கொடிய தாக்குதலில் 43 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT