இந்தியா

மகாராஷ்டிராவில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 16 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

DIN

மகாராஷ்டிரா மாநிலத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 16 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். 

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே அம்பேகான் எனும் கிராமத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது 6 வயது சிறுவன் ரவி பண்டிட் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். 

உடனே இது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், சிறுவன் 10 அடி ஆழத்தில் இருப்பதை கண்டறிந்தனர். 

இதையடுத்து அவர்கள் போலீசாருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். சுமார் 16 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுவன் ஆழ்துளை கிணற்றில் இருந்து இன்று உயிருடன் மீட்கப்பட்டான்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT