இந்தியா

ஈவிஎம், விவிபெட் இயந்திர மென்பொருள் தொடர்பான பொதுநல வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN


மின்னனு வாக்கு இயந்திரம் மற்றும் விவிபெட் இயந்திரத்தின் மென்பொருள் தொழில்நுட்பங்களை ஆய்வுக்குப்படுத்தி தெரிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் தொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் விவிபெட் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொழில்நுட்பங்களை ஆய்வுக்குட்படுத்தி தெரிவிக்கக் கோரி சுனில் ஆஹ்யா மற்றும் ரமேஷ் பெல்லாம்கொண்டா ஆகிய இரண்டு ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தொடுத்துள்ளனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோரது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த அமர்வு, இதுதொடர்பாக மார்ச் 1-ஆம் தேதி பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT