இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: ராஜீவ் சக்ஸேனாவுக்கு 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

DIN

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு 25ஆம் தேதி  வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமீன் அளிக்குமாறு ராஜீவ் சக்ஸேனா விசாரணை நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
அதை கடந்த 14ஆம் தேதி பரிசீலித்த நீதிமன்றம், அவருக்கு 7 நாள்கள் இடைக்கால ஜாமீன் அளித்தது.
அத்துடன், ராஜீவ் சக்ஸேனாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை 25ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.
முன்னதாக, ராஜீவ் சக்ஸேனாவின் உடல் நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அளித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT