இந்தியா

உ.பி.யில் வெடிவிபத்து: 13 பேர் பலி

DIN

உத்தரப் பிரதேசத்தின் பதோஹி நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பதோஹி நகரின் ரோஹ்தா பஜார் பகுதியில் கலியார் மன்சூரி என்பவரது கடை அமைந்துள்ளது. அந்தக் கடைக்குப் பின்புறம் மன்சூரியின் மகன் கம்பளத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், மன்சூரியின் கடையில் சனிக்கிழமை மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்வில் அருகிலுள்ள 3 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில், இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.

கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்டாசு தயாரிப்பு?: வெடிவிபத்து ஏற்பட்ட கடையில் கலியார் மன்சூரி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாக அந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள் புகார் தெரிவித்தனர்.

முதல்வர் யோகி இரங்கல்: 

பதோஹி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT