இந்தியா

அபிநந்தன் தொடர்பான விடியோவை நீக்குங்கள்: யூ ட்யூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டிப்பு 

விமானி அபிநந்தன் தொடர்பான விடியோவை நீக்குங்கள் என்று யூ ட்யூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: விமானி அபிநந்தன் தொடர்பான விடியோவை நீக்குங்கள் என்று யூ ட்யூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமையன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் மாயமானார். 

இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் ரக விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம் என்றும், அதில் இருந்த விமானி மாயமானதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் புதன் காலை உறுதி செய்தார்.

அதேசமயம் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் தங்கள் வசம் இருப்பாக தெரிவித்த பாகிஸ்தான்,  இது தொடர்பான சில விடியோக்களையும் நேற்று வெளியிட்டது. ஆனால் முதலில் இதனை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்யவில்லை. விசாரணை நடப்பதாக மட்டும் கூறி இருந்தது.

ஆனால் அதன் பின்னர் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதேசமயம் விமானி அபிநந்தன் வர்தமான் தொடர்பான விடியோக்கள் வெளியிடப்பட்டது என்பது போர்க்கைதிகளை நடத்தும் ஜெனிவா ஒப்பந்த நடைமுறைகளுக்கு எதிரானது என்று இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விமானி அபிநந்தன் தொடர்பான விடியோவை நீக்குங்கள் என்று யூ ட்யூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

SCROLL FOR NEXT