60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம்: உ.பியில் யோகியின் அதிரடி பிளான்
உத்தர பிரதேசத்தில் 60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
லக்னௌ: உத்தர பிரதேசத்தில் 60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்கில் கும்பமேளா தற்போது விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு இனி மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அதன்படி மாநில அரசின் முதியவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்பும் மாநிலம் முழுவதும் உள்ள சாதுக்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்துக்கொள்ள ஏதுவாக ஜனவரி 30 வரையில் மாநில அரசின் சார்பில் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அதேசமயம் இந்த அறிவிப்பானது அயோத்தியில் கோவில் கட்டும் விவகாரத்தில் பாஜக அரசு எதிர்கொண்டு வரும் விமர்சனங்களை சமாதானம் செய்யும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.