சூர்யா - 47 படத்தில் மோகன்லால்? இயக்குநர் பதில்!
சூர்யா - 47 படம் குறித்து...
இயக்குநர் ஜித்து மாதவன் சூர்யா - 47 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சூர்யா - 47, திரைப்படங்களில் இணைந்தார். இதில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டீசர் காட்சிகளால் எதிர்பார்ப்பும் இருப்பதால் முதல் நாளே பெரிய வணிகத்தைச் செய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தன் 47-வது படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் சூர்யா நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இப்படத்தில் நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அதனை இயக்குநர் ஜித்து மாதவன் மறுத்ததுடன், “இன்னும் சூர்யா - 47 போஸ்டர் கூட வெளியாகவில்லை. அதற்கு இவ்வளவு ஊகங்களா? இன்னும் கொஞ்ச நாள் படப்பிடிப்பு இருக்கிறது. நடிகர் மோகன்லால் இப்படத்தில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஜித்து மாதவன் எழுதிய கதையில் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய பாலன் தி பாய் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Director Jithu Madhavan has spoken about the film Suriya 47.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.