FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை: நடிகர் மாதவன்

தன் அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் மாதவன் பேச்சு...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:21 pm IST
நடிகர் மாதவன்
பகிர்:

நடிகர் மாதவன் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார்.

புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடித்த இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.

டீசர், டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற இப்படம் வருகிற ஆக. 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதில் நடிகர்கள் துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், வினய் உள்பட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் மாதவன், “நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. அரசியல் என்பதை மிக பொறுப்பான விஷயமாகப் பார்க்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைத்திருக்க வேண்டும். யாராவது நல்ல காரியங்களைச் செய்தால் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். நம் நாட்டின் மக்கள் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ யாரையாவது தேர்ந்தெடுத்தால், அவருக்கு ஆதரவளிப்பது எனது கடமை என நினைக்கிறேன்.

எனது முடிவுகளை இந்த விமர்சனங்கள் பாதிப்பதில்லை. இதைக் கொண்டு என்னைக் காயப்படுத்த முயன்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Madhavan has spoken about his political stance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments