இந்தியா

தில்லியில் அடர் பனிப்பொழிவு: 15 ரயில்கள் தாமதம்

DIN


புதுதில்லி: தில்லியில் அடர் பனிமூட்டம் காரணமாக தில்லியில் 15 ரயில்களின் புறப்பாடு, வருகை தாமதமாகின. மக்களின் இயல்பு வாழ்ககை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தலைநகர் தில்லியில் அடர் பனிப்பொனிவு மற்றும் குளிர் காற்றின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், காற்றின் தரம் மிகவும் மோசம் எனும் பிரிவில் நீடித்து வருகிறது. 

நேற்று திங்கள்கிழமை மாலையில் (ஜன.21) இருந்து தில்லி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அடிக்கடி மழைக்கு வாய்ப்பு இருக்கும். இந்தநிலை ஜனவரி 25-ஆம் தேதி வரை நீடிக்கும். நல்ல மழை ஜனவரி 22-ஆம் தேதி வரையும் அதன் பிறகு விட்டுவிட்டும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இந்தக் காலத்தின்போது சூழல் மண்டலத்தில் மாசுபடுத்திகளை மழைநீர் அடித்துச் செல்லும் என்பதால் காற்றில் மாசு அளவு குறையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடர் பனிமூட்டம் காரணமாக, இன்று தில்லியில் 15 ரயில்களின் புறப்பாடு, வருகைகள் சுமார் 2-3 மணி நேரம் தாமதமாகின. மக்களின் இயல்பு வாழ்ககை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT