இந்தியா

வருவாய்த் துறையில் பணியாற்றி ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்தவரின் நிறைவேறாத ஆசை

DIN


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றி லஞ்ச லாவண்யம் மூலம் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்தவரை ஊழல் தடுப்புப் படையினர் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற கனவோடு கோடிக் கணக்கில் பணம் சேர்க்க லஞ்ச லாவண்யத்தை கையிலெடுத்த சஹி ராம் மீனா, தனது கனவு நிறைவேறும் முன்பே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுவிட்டார்.

மக்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு அவர் ஏற்கனவே கடிதமும் எழுதியுள்ளார். இதுமட்டுமல்ல, ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் இடம் ஒதுக்கக் கோரி கட்சிகளுக்கு ஏற்கனவே அவர் கடிதம் எழுதி அது பலனளிக்காமல் போனதுதான் துரதிருஷ்டம்.

ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற போது கையும் களவுமாகக் கைதான ராம் மீனாவின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சிக் காத்திருந்தது. அவரது வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய ஆவணங்களோடு, ராம் மீனா ஏராளமான கட்சிகளுக்கு தான் உங்கள் தொண்டன் என்றும், எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்குமாறும் கைப்பட எழுதிய ஏராளமான கடிதங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றியிருப்பது தனிக்கதை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT