இந்தியா

ராகுலிடம் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை: மனோகர் பாரிக்கர் மறுப்பு 

ராகுலிடம் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறுப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

DIN

பனாஜி: ராகுலிடம் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறுப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி  தனது தாயாரான சோனியாவுடன் கோவாவுக்குச் செண்டிருந்தார். தற்போது உடல்நலக் குறைவால் ஓய்விலிருக்கும் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரை, அவர் செவ்வாயன்று காலை பாரிக்கரின் அலுவலகத்திற்கே சென்று சந்தித்தார். மரியாதை நிமித்தமானது இந்த சந்திப்பு என்று பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் தெரிவித்தார். 

பின்னர் செவ்வாய் மாலை கொச்சினில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், 'ரஃபேல் விவகாரத்தில் எனக்கு எதுவும் தெரியாது; பிரதமர் மோடி கூறியதையே நான் செய்தேன்'  என்று மனோகர் பாரிக்கர் கூறியதாகத் தெரிவித்தார்.    

இந்நிலையில் ராகுலிடம் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை என்று ராகுல் காந்திக்கு கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறுப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள கடிதத்தில் பாரிக்கர் கூறியுள்ளதாவது:

நமது சந்திப்பு வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தது; தற்செயலானதும் கூட. உங்களுடனான எனது சந்திப்பில் ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை.  நீங்கள் என்னை சந்தித்தது ஆரோக்கியமான நாகரீகம் என்று நினைத்தேன் . ஆனால்  உங்களது சந்திப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். 

இவ்வாறு பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT