இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

IANS


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜி, பாட்டியாலா நீதிமன்றத்துக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதனை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ், இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற அனுமதி அளித்தார். மேலும், இது தொடர்பாக ஜூலை 11ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்ததாக தெரிகிறது. 

இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அமலாக்கத் துறையும் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாறியிருப்பது, சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT