இந்தியா

மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் 'சூப்பர் 30' நிறுவனர் ஆனந்த் குமார்! 

PTI


பாட்னா: பாட்னாவைச் சேர்ந்த கல்வியாளர், சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த் குமார், மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்தின் வாழ்க்கை வரலாறு, சூப்பர் 30 என்ற பெயரில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைப்படமாக வெளியாக உள்ள நிலையில், ஆனந்த் குமார் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

ஏழ்மையோடு போராடிய ஆனந்த், பல மாணவர்களின் ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை சாதனையாளராக்கியது மட்டுமே இதுவரை நமக்குத் தெரியும். ஆனால் அவர் மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வருவது தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவர் அளித்த பேட்டியில், இந்த பிரச்னை 2014ம் ஆண்டு தொடங்கியது. எனக்கு அப்போது காது கேட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மருத்துவர்களை நாடி பரிசோதனை செய்ததில், காதில் எந்த பிரச்னையும் இல்லை, மூளையில் இருந்து வலது பக்கக் காதுக்கு வரும் நரம்பில் உருவாகியுள்ள கட்டிதான், காது கேளாத பிரச்னைக்குக் காரணம் என்று தெரிய வந்தது. சோதனையில், வலது பக்கக் காதின் கேட்புத் திறன் வளர்ந்து வரும் கட்டியால் 90 சதவீதம் சேதமடைந்துவிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது என்றார். இது புற்றுநோய்க் கட்டி இல்லை என்றாலும், இந்த கட்டி பாதித்ததால் இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என்று அப்போது மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

தற்போதைய உடல்நிலையால், தனது வாழ்க்கைப் பற்றிய திரைப்படம் தயாரிக்கும் பணிகள் விரைவில் முடிவடைய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

வாழ்க்கை மற்றும் மரணம்  பற்றி எந்த சிந்தனையும் தற்போது எனக்கு இல்லை. ஆனால், நான் உயிரோடு இருக்கும் போதே இந்த திரைப்படம் வெளியாக வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன் என்கிறார் ஆனந்த்.

ஹிருத்திக் ரோஷன் புகழ்பெற்ற நடிகர். அவர் நடித்து வெளியாகும் சூப்பர் 30 திரைப்படம் மூலம் எனது வாழ்க்கை உலக அளவில் தெரியவரும் என்று நாம்புகிறேன் என்றும் ஆனந்த் குமார் கூறுகிறார்.

ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கும் சூப்பர் 30 திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT