இந்தியா

5 ஆண்டுகளில் 10,500 பாலியல் புகார்கள்: மகளிர் மேம்பாட்டுத் துறை தகவல்

DIN

கடந்த 5 ஆண்டுகளில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு 10,500 பாலியல் வன்கொடுமை, வன்கொடுமை முயற்சி புகார்கள் வந்துள்ளன என்று மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்வியொன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய மகளிர் மற்றும் சிறார் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில்:
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு வரை, 10,5531 பாலியல் வன்கொடுமை, வன்கொடுமை முயற்சி புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான புகார்கள், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், பிகார் ஆகிய வடமாநிலங்களில் இருந்து வந்துள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் 6,987, தில்லியில் 667, ஹரியாணாவில் 659, ராஜஸ்தானில் 573, பிகாரில் 304 பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் வந்துள்ளன. 
கடந்த 5 ஆண்டுகளில், 2014-இல் மட்டும் அதிகபட்சமாக 2,575 பாலியல் வன்கொடுமை புகார்கள் வந்துள்ளனஎன்றார் ஸ்மிருதி இரானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT