இந்தியா

கேரளாவுக்கு அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட்: மிகக் கன மழைக்கு வாய்ப்பு

இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை கேரளாவின் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

DIN


புது தில்லி: இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை கேரளாவின் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கி 40 நாட்கள் ஆன நிலையில், கேரளாவில் பருவமழை தீவிரமாகியுள்ளது. 

இடுக்கி மாவட்டத்துக்கு ஜூலை 20ம் தேதி வரையும், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு ஜூலை 19ம் தேதி வரையும், எர்ணாகுளத்துக்கு 20ம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிகக் கன மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்பரப்பு மோசமாக இருக்கும் என்றும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், இதே நிலை ஜூலை 22ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT