இந்தியா

தஸ்லிமா நஸ்ரினின் விசா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு 

DIN

புது தில்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசாவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

வங்கதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். 'லஜ்ஜா' என்ற இவரது புத்தகமானது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர்களது மிரட்டலின் காரணமாக அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, தற்போது ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்.

தொடர் மிரட்டலின் காரணமாக அவர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்திய விசா பெற்று இங்குதான் தங்கி வருகிறார். தற்போது இவர் கொல்கத்தாவில் தங்கியுள்ளார்.

அவரது விசா காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அவரது விசா காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT