இந்தியா

தேர்தலில் வாக்குச் சீட்டு முறை:  மம்தா மீண்டும் வேண்டுகோள் 

தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

DIN

கொல்கத்தா: தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சனியன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:

தேர்தலில் மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையே சிறந்ததாகும். வாக்குப்பதிவு எந்திரங்கள் முன்னால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அந்நாடுகளே இப்போது வாக்களிக்க இயந்திரத்தைப் பயன்படுத்துவது கிடையாது.

அப்படி இருக்கும்போது மீண்டும் ஏன் வாக்குச் சீட்டு முறையை இங்கு கொண்டு வர முடியாது? இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களுக்கு மாநில நிதி மிகவும் அவசியம்,

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT