இந்தியா

இஸ்ரேல் பிரதமர் செப்.9இல் இந்தியா வருகை

DIN

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அரசு தரப்பு வட்டாரங்கள் கூறியதாவது: 

இந்தியாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சில மணி நேரங்கள் மட்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். இதை தவிர்த்து, வேறு முக்கிய சந்திப்புகள் எதற்கும் திட்டமிடப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு 8 நாள்களுக்கு முன்னதாக, இந்தியாவுக்கு நெதன்யாகு சுற்றுப்பயணமாக வருகை தரவுள்ளார். முன்னதாக, இஸ்ரேல் நாட்டின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை நெதன்யாகு கடந்த 20ஆம் தேதி படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT