இந்தியா

உ.பி.: மின்னல் தாக்கி ஒரே நாளில் 32 பேர் பலி

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மின்னல் தாக்கியதில் கான்பூர் மற்றும் ஃபதேபூரில் தலா 7 பேரும், ஜான்சியில் 5 பேரும், ஜலானில் 4 பேரும், ஹமீர்பூரில் 3 பேரும், காஜிபூரில் இருவரும், ஜான்பூர், பிரதாப்கர், கான்பூர் தேஹாத், சித்திரகூடம் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். மேலும், 13 பேர் காயமடைந்தனர். முன்னதாக, சனிக்கிழமையும் இதேபோல் மின்னல் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT